ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 262.0 மதிப்பெண் பெற்று இந்திய வீராங்கனை திலோத்தமா 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
எகிப்து நாட்டில் கெய்ரோவில் உலகக் கோப்பை ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில், உலகக் கோப்பை பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 14 வயது நிரம்பிய இந்திய வீராங்கனை திலோத்தமா 262.0 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். கராத்தே மற்றும் கைப்பந்து இரண்டுமே திலோத்தமாவுக்கு பிடித்தமான விளையாட்டுகள். கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வம் காட்டி, அதில் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். பெங்களூருவில் உள்ள துப்பாக்கிச் சுடும் அகாடமியில் தனது துப்பாக்கி சுடும் திறமையை அதிகளவில் வளர்த்துக் கொண்டுள்ளார்.
தோனி முதல் பாண்டியா வரை எல்லா கேப்டனாலும் ஓரங்கட்டப்பட்ட சஞ்சு சாம்சன்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 400க்கு 400 மதிப்பெண்கள் எடுத்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேசிய போட்டி ஜூனியர் பிரிவில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கடந்த ஆண்டு நடந்த தேசிய போட்டியில் சீனியர் பிரிவில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 6ஆவது இடம் பிடித்தார். நித நிலையில், தான் எகிப்து நாட்டில் கெய்ரோவில் நடந்த உலகக் கோப்பை 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
அடி மேல் அடி வாங்கும் ஆஸி., மேக்ஸ்வெல் காயம்: இந்தியாவுக்கு வருவது சந்தேகம்?
இதையடுத்து பேசிய அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பயிற்சியின் போதும் துப்பாக்கி, அதற்குரிய ஜாக்கெட் உடன் இருப்பதற்கு நான் முதலில் பழகிக் கொண்டேன். அதன் பிறகு துப்பாக்கி சுடுவதையும் ரசிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தோற்றாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் என்னால் பதக்கம் வெல்ல முடியும் என்று எனக்கு நம்பிக்கை என்று தெரிவித்தார்.
திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்த சூர்யகுமார் யாதவ்!
திலோத்தமாவைத் தொடர்ந்து அவரது தந்தை கூறியிருப்பதாவது: திலோத்தமாவின் பயிற்சிக்கு துப்பாக்கி வாங்க ரூ.2.32 லட்சமும், ஜாக்கெட்டிற்கு ரூ.65 ஆயிரமும் தேவைப்பட்டது. நான், சேமித்து வைத்திருந்த பணத்தை அவருக்காக செலவு செய்தேன். திலோத்தமா பயிற்சி செய்தால், நான் லேப்டாப்பில் வேலை செய்வேன். பயிற்சி முடிந்த பிறகு இருவரும் ஒன்றாகத் தான் வீட்டிற்கு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
