ticket sale postponded due to protest in tamilnadu

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த விட மாட்டோம் என தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை தொடர்ந்து சென்னையில் வரும் 20 ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது

சென்னை ராஜஸ்தான் இடையே வரும் 20 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற இருந்தது.

நேற்று பெரும் சவாலுக்கு இடையே போட்டி நடைபெற்றது.இந்நிலையில், இனி வரும் போட்டிகள் நடக்கும் போதும், அன்றைய தினம் போராட்டம் வலுக்கும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து இருகின்றனர்.

இந்நிலையில்,இன்று டெல்லியில் பிசிசிஐ மற்றும் ஐ பிஎல் நடத்திய ஆலோசனையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்து நடைபெற இருந்த 6 விளையாட்டு போட்டிகளும் வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது நாளை முதல் டிக்கெட் விற்பனை செய்ய இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.