Tianjins Open Climax Maria Sharapova watched ...
டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ரஷியாவின் மரிய ஷரபோவா சாம்பியன் வென்று அசத்தினார்.
டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நேற்று நடைப்பெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ரஷியாவின் மரிய ஷரபோவா, பெலாரஸின் அரினா சபலென்காவுடன் மோதினார்.
இதில், 7-6, 7-6 (10-8) என்ற நேர் செட்டில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் மரிய ஷரபோவா.
இவர்கள் விளையாடிய இரண்டு செட்டிலும் தொடக்கத்தில் 1-4 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கினாலும் அதன் பிறகு சரிவை சமாளித்து மீண்டு எழுந்த ஷரபோவா இந்த வெற்றிக்காக 2 மணி 5 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாதங்கள் தடையில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் மறுபடியும் களம் திரும்பிய ஷரபோவா அதன்பிறகு வென்ற முதல் பட்டம் இது.
மொத்தத்தில் இது அவருக்கு 36-வது சர்வதேச பட்டமாகும்.
