Three men who advanced in the Asian Boxing Championship

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், கெளரவ் பிதுரி, அமித் பாங்கல் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேரடியாக 75 கிலோ எடைப் பிரிவின் இரண்டாவது சுற்றில் களம் கண்ட விகாஸ் கிருஷ்ணன், தாய்லாந்தின் பதோம்சக் குட்டியாவுடன் மோதினார்,.

இதில் விகாஸின் தாக்குதலில் குட்டியாவிற்கு இடது கண் அருகே காயம் ஏற்பட்டது. இதையடுத்து இரு முறை சிகிச்சை பெற்ற குட்டியா, பின்னர் போட்டியிலிருந்து விலகியதால் விகாஸ் வெற்றி பெற்றார்.

விகாஸ் தனது காலிறுதியில் இந்தோனேசியாவின் பிரம்ம ஹேந்திராவை சந்திக்கிறார்.

மற்றொரு 56 கிலோ எடைப் பிரிவின் 2-ஆவது சுற்றில் கெளரவ் பிதுரி, தாய்லாந்தின் யூட்டாபோங் டாங்டீயை வீழ்த்தினார்.

கெளரவ் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜியாவெய் ஹாங்குடன் மோதுகிறார்.

மற்றொரு இந்தியரான அமித் பாங்கல் 49 கிலோ எடைப் பிரிவில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மானியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.