Three Badges for India at Asian Judo Cadet Championship

ஆசிய ஜூடோ கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய ஜூடோ கேடட் சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் மகளிர் 44 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த தங்ஜம் தபாபி தேவி தங்கம் வென்றார்.

அதேபோன்று மகளிர் 40 கிலோ எடைப் பிரிவில் அரியாணாவின் சிம்ரன் வெண்கலம் வென்றார்.

மற்றொரு ஆட்டத்தில் ஆடவர் 90 கிலோ எடைப் பிரிவில் அரியாணாவின் பரம்ஜீத்தும் வெண்கலம் வென்றார்.

அதன்படி ஆசிய ஜூடோ கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்று அசத்தியது.