This is the South African team to face India Duff beats India
டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள போகும் தென் ஆப்பிரிக்க அணி வெளியிடப்பட்டது.
பதினைந்து பேர் கொண்ட இந்த அணியில் கிறிஸ் மோரிஸ், மோர்னே மோர்கெல், ககிசோ ரபாடா, வெர்னான் பிலாண்டர், அன்டிலே பெலுக்வாயோ என பந்துவீச்சுக்கான முழு படையும் களம் காண்கிறது.
இதில் கிறிஸ் மோரிஸ், ஜூலையில் காயம் கண்டு ஓய்வில் இருந்த நிலையில் தற்போது களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
உடல் நலக் குறைவால் ஜிம்பாப்வேக்கு எதிரான நான்கு நாள் டெஸ்டில் பங்கேற்காத டூ பிளெஸ்ஸிஸ், இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டனாக களம் காண்கிறார். அவருடன் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினும் இணைந்துள்ளார்.
அணிக்கான ஒரே விக்கெட் கீப்பராக குவிண்டன் டி காக் சேர்க்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரே டெஸ்டில் காயம் கண்டு விலகியிருந்த அவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் அணிக்கு திரும்பியுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி
ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹசீம் ஆம்லா, டெம்பா பவுமா, குவிண்டன் டி காக், தியுனிஸ் டி பிரைன், டி வில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், மோர்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், அன்டிலே பெலுக்வாயோ, வெர்னான் பிலாண்டர், ககிசோ ரபாடா, டேல் ஸ்டெயின்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
