They are leading in the International Chess Championship ....

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர்.

சின்கியூபீல்டு கோப்பைக்கான சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் 7-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் நெபோம்நியாக்ஷியை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் லெவோன் ஆரோனியன், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுராவைத் வீழ்த்தினார்.

இந்தச் சுற்றின் எஞ்சிய ஆட்டங்கள் சமனில் முடிந்தன.

இன்னும் இரு சுற்றுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மேக்ஸைம் வச்சியர், ஆர்மீனியாவின் லெவோன் ஆரோனியன் ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் எடுத்து முன்னிலையில் உள்ளனர்.

நடப்பு உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 4-வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்காவின் பாபியானோ கருணா, ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளனர்.

ரஷியாவின் பீட்டர் ஸ்விட்லர் 3 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளார்.

ரஷியாவின் நெபோம்நியாக்ஷி, ஹிகாரு நாகமுரா, அமெரிக்காவின் வெஸ்லே சோ ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளனர்.