These players will be exempted from selection competition - Indian Wrestling Federation

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணி தேர்வுப் போட்டியில் சாக்ஷி மாலிக், சுஷில்குமார், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகிய வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

ஆடவர் கிரேக்கோ ரோமன், ஃபிரீ ஸ்டைல் பிரிவுகளில் ஜூன் 10-ஆம் தேதி சோனேபட்டிலும், மகளிருக்கு ஜூன் 17-ஆம் தேதி லக்னெளவிலும் தேர்வு போட்டிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சுஷில்குமார், சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோர் தாங்களே சொந்தமாக பயிற்சி மேற்கொண்டு ஆசிய போட்டிகளுக்கு தயாராகி வருவதாக சம்மேளனத்துக்கு வேண்டுகோள் அனுப்பி இருந்தனர். 

மேலும், மேற்கண்ட வீரர்கள் அனைவரும் தங்கள் திறமையை பல்வேறு போட்டிகளில் வெளிப்படுத்தி நாட்டுக்கு பதக்கம் பெற்றுத் தந்தனர். அவர்களது பிரிவுகளில் வேறு எவரும் போட்டியாக இல்லாத நிலை உள்ளது. 

எனவே, அவர்களே சுயமாக தயார்படுத்திக் கொள்வதற்கு அனுமதி தரப்படுகிறது. மேலும், அணி தேர்வு போட்டியில் இருந்து மேற்கண்ட வீரர்களுக்கு விலக்கு தர சம்மேளனம் தீர்மானித்துள்ளது. பதக்கங்களை வெல்வதே நோக்கமாக கொள்ள வேண்டும்" என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.