These are the teams that have won the All India Badminton tournaments ...

அகில இந்திய அளவிலான ஐவர் பாட்மிண்டன் போட்டிகளில் தெற்கு, மேற்கு இரயில்வே அணிகளும், சென்னை ஐ.சி.எப் அணியும், சென்னை பல்லாவரம் எப்.ஆர்.சி. அணியும், சென்னை எத்திராஜ் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.

திருச்சி மாவட்டம், பொன்மலை ஆர். ராஜகோபாலன் நினைவு அகாதெமி சார்பில் அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஐவர் பாட்மிண்டன் போட்டிகள் கருமண்டபம் ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கின. 

பள்ளி முதல்வர் ஏ.தாமஸ் ஜான் ஜூலியன் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அணிகள் போட்டியில் பங்கேற்றன.

இதில் ஆண்கள் பிரிவில் திருவனந்தபுரம் ஓரியண்டல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 35-22, 35-26 என்ற புள்ளிக்கணக்கிலும், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு ஏ.ஆர். அணியை 29-35, 35-29, 37-35 என்ற புள்ளிக்கணக்கிலும் மும்பை மேற்கு இரயில்வே அணி வென்றது.

அதேபோன்ன்று, திருவனந்தபுரம் ஓரியண்டல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 30-35, 35-19, 35-23 என்ற புள்ளிக்கணக்கிலும், ஆந்திரபிரதேசம் மாநிலம், ராஜமுந்திரி காமாட்சி தொழிற்சாலை அணியை 35-25, 35-22 என்ற புள்ளிக்கணக்கிலும், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு ஏ.ஆர். அணியை 35-30, 35-20 என்ற புள்ளிக்கணக்கிலும் தெற்கு இரயில்வே அணி வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் விசாகப்பட்டினம் மீடியா விஷன் அணியை 35-23, 35-28 என்ற புள்ளிக்கணக்கிலும், கேரள மாநிலம், பாலக்காடு கேலக்சி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 35-27, 35-14 என்ற புள்ளிக்கணக்கிலும் சென்னை ஐ.சி.எப். அணி வென்றது.

அதேபோன்று பெண்கள் பிரிவில் தஞ்சாவூர் வடமலை பி.பி.சி. அணியை 35-17, 35-15, திருவனந்தபுரம் ஓரியண்டல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 26-35, 35-14,35-33, செங்கல்பட்டு ஜெ.ஜெ. பெண்கள் அணியை 35-23, 35-29 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை பல்லாவரம் எப்.ஆர்.சி. அணி வீழ்த்தியது.

மற்றொரு பிரிவில், கேரளம் மாநிலம், பாலக்காடு ரைசிங் ஸ்டார் அணியை 35-22, 35-21 என்ற புள்ளிக்கணக்கிலும், திருவனந்தபுரம் ஓரியண்டல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 35-16, 35-15 என்ற புள்ளிக்கணக்கிலும் சென்னை எத்திராஜ் கல்லூரி அணி வீழ்த்தியது.