These are the advanced teams for the next round of the World Cup football tournament ...

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி ரஷியாவில் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடக்கிறது. 

இதில் தொடக்க ஆட்டத்தில் ரஷியாவும் - சௌதி அரேபியாவும் மோதுகின்றன. பல்வேறு நாடுகளில் பயிற்சியில் கால்பந்து வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, பாரிஸில் திங்கள்கிழமை பிரான்ஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடந்த நட்பு ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸ் ஓலிவர் கிரெளட், நேபிள் ஃபேகிர் ஆகியோர் தங்கள் அணிக்கான கோல்களை அடித்தனர்.

இதுகுறித்து அயர்லாந்து அணியின் பயிற்சியாளர் மார்ட்டின் ஓ நீல், "பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பிரான்ஸ் அணி சிறப்பாக வலுவடைந்துள்ளது" என்று கூறினார். 

அதேபோன்று, செயின்ட் கேலனில் நடைபெற்ற இத்தாலி - சௌதி அரேபியா அணிகளுக்கான நட்பு ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது. 

மற்றொரு ஆட்டத்தில் ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் - துனிசியா இடையே பிராகாவில் நடந்த நட்பு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

அதேபோன்று, மெக்ஸிகோ - வேல்ஸ் அணிகள் இடையே கலிபோர்னியா ரோஸ்பெளலில் நடந்த நட்பு ஆட்டம் கோலின்றி சமனில் முடிவடைந்தது.