there is no more cricket in chepakkam said ipl

சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த விட மாட்டோம் என தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தின.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் விளைவாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்து நடைபெற இருந்த 6 விளையாட்டு போட்டிகளும் வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது

சென்னையில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் திருவனந்த புரத்திற்கு மாற்ற முடிவு செய்யப் பட்டு உள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், ரஜினி மக்கள் மன்றம் உள்ளிட்ட அனைவரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் மீறி பலத்த போலிஸ் பாதுகாப்புடன் ஐபிஎல் போட்டிகள் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், அடுத்து வரும் விளையாட்டு போட்டிகள் கூட நடைபெற விடாமல் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், வேறு மாநிலத்தில் நடத்த ஐபி எல் திட்டமிட்டு உள்ளது.

இது தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.