தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 'பி' அணிக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா பி  மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையே நேற்று நடைப்பெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த கர்நாடகம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ஓட்டங்கள் அடித்தது. 

அடுத்து ஆடிய இந்திய பி அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்கள் எடுத்து வீழ்ந்தது. 

கர்நாடக வீரர் ரவிகுமார் சமரத் 117 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

இந்திய பி அணி தரப்பில் சித்தார்த் கெளல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். 

பின்னர் ஆடிய இந்திய பி அணியில் மனோஜ் திவாரி 120 ஓட்டங்கள் எடுத்தும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை. 

கர்நாடக தரப்பில் ஷ்ரேயஸ் கோபால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.