பத்தாவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் படு மோசமான தோல்வியை சந்தித்ததால் இதனை மறக்கக்கூடிய ஒன்று என்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், வெரும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியைத் தோற்கடித்தது பெங்களூர் அணி. எனினும் பெங்களூர் அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது.

ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியது:

“இந்த சீசன், நாங்கள் மறக்கக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. நாங்கள் செய்த தவறுகள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.

டெல்லிக்கு எதிராக கிடைத்த வாய்ப்பை எங்கள் வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அடுத்த சீசனில் வாய்ப்பிருந்தால், இப்போதுள்ள வீரர்களில் 3 முதல் 5 பேரை தக்கவைத்துக் கொள்வோம். இந்த சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியோடு முடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டார் கோலி.