The next member of the BCCI board is left

பிசிசிஐ நிர்வாகக் குழு (சிஓஏ) உறுப்பினர் பதவியிலிருந்து இராமச்சந்திர குஹா விலகிய நிலையில் தற்போது ஐடிஎப்சி நிர்வாக இயக்குநரான விக்ரம் லிமாயேவும் விலகுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர், தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்கவுள்ளதால் சிஓஏ உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்கிறார்.

இது தொடர்பாக சிஓஏ தலைவரும், முன்னாள் சிஏஜியுமான வினோத் ராய் கூறியது:

"கோடைகால விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூலை 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தொடங்குகிறது. அதுவரை விக்ரம் லிமாயே சிஓஏ உறுப்பினர் பதவியில் இருப்பார்.

அதன்பிறகு அவர் தன்னை சிஓஏ உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்.

ஏற்கெனவே இராமச்சந்திர குஹா விலகிவிட்ட நிலையில், இப்போது விக்ரம் லிமாயேவும் விலகுகிறார். இவர்களுக்குப் பதிலாக மாற்று உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதை உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு வரும் 26-ஆம் தேதி கூடுகிறது. அதற்கு முன்னதாக பிசிசிஐ நிர்வாகிகளை அழைத்து, லோதா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளேன்' என்றுத் தெரிவித்தார்.