The Indians who participated in the Thomas-Uber Cup competition are ...

தாமஸ் - உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், பிரணாய் உள்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். 

தாமஸ்-உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெறவுள்ளது. வரும் 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது. 

இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சாய்னா, பிரணாய் ராய், சாய் பிரணீத் உள்ளிடோர் கலந்து கொள்கின்றனர். மேலும் சமீர் வர்மா, லக்ஷய் சென் ஆகியோர் ஆடவர் பிரிவில் பங்கேற்கின்றனர்.

மகளிர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி, சாய் கிருஷ்ண பிரியா, அனுரா பிரபு, வைஷ்ணவி பாலே உள்ளிட்டோர் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்கின்றனர். 

இரட்டையர் பிரிவில் ஆடவர் இணை மனு அட்ரி-சுமித் ரெட்டி, ராமச்சந்திரன் - அர்ஜூன், சன்யம் சுக்லா - அருண் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் மேக்னா - பூர்விஷா, பிரஜக்தா சாவந்த் - சனியோகிதா, பங்கேற்கின்றனர்.