சிலிகுரி,
தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை இந்திய அணி வீழ்த்தியது.
தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சிலிகுரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தரப்பில் கமலாதேவி 45-வது நிமிடத்திலும், இந்துமதி 58-வது நிமிடத்திலும், சஸ்மிதா மாலிக் 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
நேபாள அணி சார்பில் சபித்ரா பண்டாரி பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST