தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்றுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த மாசாணமுத்துவின் வீடு வெள்ளத்தில் இடிந்து விழுந்த நிலையில், வேதனையோடு புரோ கபடி லீக் தொடரில் விளையாடி வருகிறார்.

புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசன் அகமதாபாத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இதில், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி வீரரான மாசாணமுத்து லக்ஷ்மணன் என்ற வீரரும் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

அர்ஷ்தீப் சிங் வேகத்தில் அடிபணிந்த தென் ஆப்பிரிக்கா – வெற்றியோடு தொடரை கைப்பற்றிய இந்தியா!

சென்னையில் இன்று நடக்கும் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில், தமிழ தலைவாஸ் அணியின் வீரர் மாசாணமுத்துவின் வீடும் ஒன்று. மாசாணமுத்துவின் வீடும் வெள்ளத்தால் இடிந்துள்ளது.

SA vs IND ODI:தென் ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் – இந்தியா 296 ரன்கள் குவிப்பு!

அவர் வாங்கிய சான்றிதழ்களும், பதக்கங்களும் மழையில் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், தான் இது தொடர்பாக மாசாணமுத்து தனது வேதனையை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

மழை வெள்ளத்தால் வீடுகள் இடிந்துவிட்டது. எனது ஊருக்கி அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட நிலையில், ஊருக்குள் வெள்ளம் வந்துவிட்டது. எனக்கு போன் பெய்து அப்பாவும், அம்மாவும் அழுகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நிற்கிறேன். சென்னையில் நடக்கும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியம். இது எனது முதல் சீசன். என்னை கபடி விளையாட வேண்டும் என்று பெற்றோரும், ஊர் மக்களும் ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களால் நான் விளையாடும் போட்டியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

South Africa vs India 3rd ODI: 15ஆவது ஒருநாள் போட்டியில் முதல் சதம் அடித்து சாதனை படைத்த சஞ்சு சாம்சன்!

சென்னை போட்டியை முடித்து நொய்டா அதன் பிறகு மும்பை என்று செல்கிறேன். ஆதலால், இப்போதைக்கு என்னால் பெற்றோருடன் இருக்க முடியாது. என்னை விளையாட அனுப்பி வைத்த அவர்களுக்காகவும், எனது அணிக்காகவும் நான் கண்டிப்பான முறையில் அணியில் இருந்து விளையாட வேண்டும் என்று மன வேதனையோடு கூறியுள்ளார்.

14 ஆண்டுகளுக்கு பிறகு காலண்டர் ஆண்டில் ஒருநாள் சர்வதேச போட்டியில் 1000 ரன்களை கடந்து கேஎல் ராகுல் சாதனை!