The game begins in Kanchipuram on November 21
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 21-ல் காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்குகிறது.
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, தடகளம், கையுந்து பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டென்னிஸ், மேசைப்பந்து இறகுபந்து ஆகிய ஏழு போட்டிகளும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதுபோல், கால்பந்து 22-ஆம் தேதியும், கூடைப்பந்து 26-ஆம் தேதியும், கபடி போட்டி டிசம்பர் 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெறும். இதில் தடகளம், நீச்சல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெறுபவர்கள் மற்றும் குழுப்போட்டிகளில் தேர்வாகும் வீரர், வீராங்கனைகள் மட்டுமே மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
ஆண்களுக்கான தடகளப்போட்டியில், 100 மீ, 800மீ, 5000மீ, 110 மீ. ஹர்டல்ஸ், உயரம், நீளம் தாண்டுதல், டிரிப்பிள் ஜம்ப் மற்றும் குண்டு, தட்டு, ஈட்டி எறிதல் ஆகியவை உள்ளன.
அதுபோல், தடகள போட்டியில் பெண்களுக்கு, 100மீ, 400மீ, 3000மீ, 100மீ. ஹர்டல்ஸ், உயரம், நீளம் உள்ளிட்ட தாண்டும் போட்டிகள் மற்றும் குண்டு, தட்டு, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் உள்ளன.
நீச்சல் போட்டிகளில் இருபாலருக்கும், 50மீ, 100மீ, 200மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர்ஃப்ளை ஸ்ட்ரோக், 200மீ தனிநபர் மெட்லே ஆகிய நீச்சல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
