The fifth time was the Madrid Masters champion Nadal ...
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை ரஃபேல் நடால் 5-வது முறையாக வென்றுள்ளார்.
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் நடால் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் மோதினார்.
இதில், 7-6 (8), 6-4 என்ற நேர் செட்களில் டொமினிக் தீமை வென்றார் நடால்.
இதன்மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் 30-ஆவது சாம்பியன் பட்டத்தைக் நடால் கைப்பற்றியுள்ளார்.
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இது.
மேலும், ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளில் அதிக சாம்பியன் பட்டம் வென்றவரான செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சின் சாதனையை சமன் செய்தார்.
இந்த ஆண்டில் களிமண் தரையில் தொடர்ச்சியாக 15 வெற்றிகளைப் பெற்றுள்ள நடால், அடுத்த வாரம் தொடங்கவுள்ள பிரெஞ்சு ஓபனில் விளையாட இருக்கிறார்.
