The appointment of the head coach from the Netherlands to India ...

இந்திய மகளிர் வலைகோற்பந்தாட்டத்திற்கு (ஹாக்கி) அணிக்கான தலைமை பயிற்சியாளராக நெதர்லாந்தைச் சேர்ந்த ஜோயர்ட் மரைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து மகளிர் வலைகோற்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளரான மரைன், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என வலைகோற்பந்தாட்ட இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது.

அவருக்கான இணை பயிற்சியாளராக சக நாட்டவரான எரிக் வோனிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜோயர்ட் மரைன் கூறுகையில்,

’இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற மிகுந்து ஆர்வத்துடன் உள்ளேன். நான் அறிந்த வரையில், இந்திய அணியினர் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதுடன், கடுமையாக உழைக்கக் கூடியவர்கள்.

உலக வலைகோற்பந்தாட்டத்தில் சக்தி வாய்ந்த ஒரு அணியாக தங்களை நிலைநாட்டிக் கொள்வதற்கான திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறேன்' என்றார்.

இதுகுறித்து, ஹாக்கி இந்தியா பொதுச் செயலர் முஷ்டாக் அகமது கூறுகையில்,

’ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது, 2016-ஆம் ஆண்டு மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியை வென்றது என கடந்த சில ஆண்டுகளாக இந்திய மகளிர் அணி முன்னேற்றம் கண்டு வருகிறது. அவர்களை மேலும் மேம்படுத்தும் வகையில் தற்போது மரைன், வோனிக் ஆகியோர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.