PKL 10: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியானது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

The 82nd league match of Pro Kabaddi League between Bengaluru Bulls and Tamil Thalaivas will be played today at Gachibowli Indoor Stadium, Hyderabad rsk

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என்று 12 அணிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் தலைவாஸ் விளையாடிய 13 போட்டிகளில் 9ல் தோல்வி 4ல் வெற்றி பெற்று புரோ கபடி லீக் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமென்றால், புள்ளிப்பட்டியலில் முதல் 6 இடங்களில் இடம் பெற வேண்டும். ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 5 புள்ளிகள், போட்டியானது டை செய்யப்பட்டால் 3 புள்ளிகள், 7 புள்ளிகள் அல்லது அதற்கும் குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ஒரு புள்ளிகள் வழங்கப்படும். தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 9 போட்டிகள் இருக்கிறது.

இதில், எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 45 புள்ளிகள் கிடைக்கும். அதோடு (45+25) என்று மொத்தமாக 70 புள்ளிகள் பெறும். மேலும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியும் இதில் அடங்கும். அதாவது தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் 6 முதல் 9 ஆவது இடங்களில் உள்ள அணிகள் தோல்வி அடைய வேண்டும்.

அப்படி தோல்வி அடைந்தால் மட்டுமே தமிழ் தலைவாஸ் புள்ளிப்பட்டியலில் முன்னேறும். இந்த நிலையில் தான் இன்று 37 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் பெங்களூரு புல்ஸ் அணி மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையிலான 82ஆவது போட்டி ஹைதராபாத்தில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அணிக்கு 5 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலமாக 30 புள்ளிகள் பெறும். இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் அணிகள் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios