The 13th time champion won the Juventus team Waking up the record ...
இத்தாலி கால்பந்து சாம்பியன் பட்டத்தை 13-வது முறையாக வென்றது ஜுவென்டஸ் அணி.
இத்தாலி நாட்டில் உள்ள பிரபல கால்பந்து கிளப் அணிகள் இடையே கோப்பா இத்தாலியா நாக் ஔட் லீக் போட்டிகள் நடைபெறுகிறது.
முதல் போட்டி கடந்த 1922-ல் தொடங்கி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. எட்டு சுற்றுக்கள் நடத்தப்பட்டு 16 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
இரண்டு முறை அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெல்லும் அணி இறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் இந்தாண்டு பல்வேறு சுற்று லீக் போட்டிகள் முடிந்து இறுதிச் சுற்றுக்கு ஜுவென்டஸ் அணியும், ஏசி மிலன் அணியும் தகுதி பெற்றன.
ரோம் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜுவென்டஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஏ சி மிலன் அணியை வீழ்த்தி தொடர்ந்து 4-வது ஆண்டாக கோப்பா இத்தாலியா பட்டத்தை வென்றது. இது அந்த அணி பெறும் 13-வது பட்டமாகும்.
