ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 10-வது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்கள் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 6 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்திய வீரர் கே.எல்.ராகுல் ஓர் இடத்தை இழந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

வங்கதேச தொடக்க வீரர் தமிம் இக்பால் 6 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் பிரத்வெயிட் 14 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இரு இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் 60 இடங்கள் முன்னேறி 42-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசையைப் பொறுத்தவரையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜடேஜா 2-வது இடத்திலும், அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளனர். 

பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-ஆவது இடத்திலும், இந்தியாவின் அஸ்வின் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்ஹசன் 3 இடங்கள் முன்னேறி 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.