Asianet News TamilAsianet News Tamil

வாழ்வா சாவா போட்டி.. உத்தேச இந்திய அணி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. 

team indias probable eleven for last t20 match against australia
Author
Australia, First Published Nov 25, 2018, 9:09 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. எனவே நாளை நடக்க உள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியின் குறுக்கே மழை வந்ததால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

team indias probable eleven for last t20 match against australia

எனவே மெல்போர்னில் நடந்த இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சுருட்டியது. 19 ஓவருக்கு அந்த அணி 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்தது. அத்துடன் போட்டி நிறுத்தப்பட்டு, டக்வொர்த் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இரண்டு முறை போட்டி மீண்டும் தொடங்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் மழை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்திய அணி எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டி கைவிடப்பட்டதால் இந்திய அணியின் வெற்றி பாதிக்கப்பட்டது.

team indias probable eleven for last t20 match against australia

அதனால் இன்று நடக்கும் கடைசி போட்டியில் வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. ஆஸ்திரேலிய அணி கடைசி போட்டியில் ஆட அந்த அணியின் நட்சத்திர பவுலர் மிட்செல் ஸ்டார்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டி20 அணியில் சேர்த்துள்ளது.

இந்திய அணியை பொறுத்தமட்டில் இன்று நடக்கும் கடைசி போட்டியில் அணியில் எந்தவித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. கடந்த இரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணிதான் களமிறங்கும். 

உத்தேச இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, கலீல் அகமது.

Follow Us:
Download App:
  • android
  • ios