Tata Steels Masters Chess Vishwanath Anand lost with russian player

டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது 7-ஆவது சுற்றில் ரஷியாவின் விளாதிமீர் கிராம்னிக்கிடம் தோல்வி கண்டார்.

டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்தை மிகத் திறமையாக எதிர்கொண்டார் ரஷியாவின் விளாதிமீர் கிராம்னிக். அதன்படி கிராம்னிக் தனது 36-வது நகர்த்தலில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

போட்டி வரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆனந்த், இந்தத் தோல்வி காரணமாக 6-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். அவர் அந்த இடத்தை ரஷியாவின் செர்கே கர்ஜகினுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இதர இந்தியர்களில் ஒருவரான அதிபன், ரஷியாவின் மேக்ஸிம் மட்லாகோவுடனான ஆட்டத்தை சமன் செய்தார்.

விதித் குஜராத்தி, ஹோலாந்தின் லூகாஸ் வேன் ஃபோரீஸ்டுடனான ஆட்டத்தை சமன் செய்தார்.