Tamils who collected three gold medals at the International Athletics Championship
மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த அண்ணாவி 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஏழாவது சபா மலேசியன் ஓபன் மாஸ்டர்ஸ் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவின் சபா தீவில் நடைப்பெற்றது. இந்தப் போட்டி மே 20, 21 அதாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் எட்டு பேர் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில் திருச்சியைச் சேர்ந்த அண்ணாவி, ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்றனர் இவர்களில் அண்ணாவி மொத்தம் மூன்று தங்கப் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தார்
சனிக்கிழமை நடைபெற்ற 50 - 54 வயது பிரிவு வட்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்ற அண்ணாவி, அந்த இரண்டிலும் தங்கம் வென்றார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் அவர் தனது 3-ஆவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
முதியோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வரும் தடகளப் பயிற்சியாளரான அண்ணாவி, திருச்சி சந்திப்பு டிக்கெட் முன்பதிவு மையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
