Tamil daughter Vaisali who won gold at Asian Blitz Chess tournament
ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தின் வைஷாலி, இந்தியா சார்பில் கலந்து கொண்டு வாகைச் சூடி அசத்தினார்.
ஆசிய பிளிட்ஸ் செஸ் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் சார்பில் வைஷாலி கலந்து கொண்டார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
இந்தப் போட்டியில் 9 சுற்றுகளில் விளையாடிய வைஷாலி 7 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளைப் பெற்று வாகைச் சூடினார். இந்த சாம்பியன் வென்றதன் மூலம் தங்கம் வென்று ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான பத்மினி 7 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.
அதேபோன்று, ஆடவர் பிரிவில் தமிழக வீரரான அரவிந்த் சிதம்பரம் 7 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்தார்.
