Asianet News TamilAsianet News Tamil

இலங்கைக்கு எதிரான டி-20 போட்டியிலும் இந்தியா அட்டகாச வெற்றி; இலங்கை மொத்தமாக சுருண்டது…

T20 match against Sri Lanka Sri Lanka is totally aggravated ...
T20 match against Sri Lanka Sri Lanka is totally aggravated ...
Author
First Published Sep 7, 2017, 9:33 AM IST


இலங்கைக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் தொடர்களையும் முழுமையாக கைப்பற்றியது இந்திய அணி.

அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக ஒரே ஒரு டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது.

இதில், இந்திய அணியில் ரஹானே, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், அக்‌ஷர் பட்டேல் பங்கேற்றனர். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த ஆட்டம் மாலையில் பெய்த பலத்த மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் 40 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது.

 ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். ஓட்டங்களை குவிக்கும் முனைப்பில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை.

கேப்டன் உபுல் தரங்கா 5 ஓட்டங்களிலும், விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 17 ஓட்டங்களிலும். மேத்யூசும் 7 ஓட்டங்களும் எடுத்து அவுட்டானார்கள்.

இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய தில்ஷன் முனவீரா, இந்திய பந்து வீச்சை நொறுக்கினார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை குறி வைத்து பதம் பார்த்த அவர், சாஹலின் ஓவர்களில் மட்டும் மொத்தம் 4 சிக்சர்களை பறக்கவிட்டார்.

இதனால் இலங்கையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அந்த அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்ததை பார்த்தபோது, 200 ஓட்டங்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

53 ஓட்டங்கள் எடுத்திருந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கிளன் போல்டு ஆனார். பின்னர் இலங்கை தொடர்ந்து சரிவுகளை காணா 150 ஓட்டமாவது எடுக்குமா? என்ற நிலை வந்தது.

ஆனால் மிடில் வரிசையில் இறங்கிய பிரியஞ்சன் கடைசிவரை தாக்குப்பிடித்து விளையாடி
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது.

பிரியஞ்சன் 40 ஓட்டங்களுடன், உதனா 19 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும் 9 ஒட்டங்கள், லோகேஷ் ராகுலும் 24 ஓட்டங்கள் எடுத்து சீக்கிரம் வெளியேறினாலும் கேப்டன் விராட் கோலியும், மனிஷ் பாண்டேவும் நிதானத்தோடு ஆடி அணியை தூக்கி நிறுத்தினர்.

தனது 50-வது சர்வதேச 20 ஓவர் போட்டியில் கால்பதித்த விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு இது 17-வது அரைசதமாகும்.

அணியின் ஸ்கோர் 161 ஓட்டங்களாய் எட்டியபோது விராட் கோலி 82 ஓட்டங்களில் கேட்ச் ஆனார்.

பின்னர் மனிஷ் பாண்டே வெற்றிக்குரிய ஓட்டங்களை பவுண்டரி மூலம் கொண்டு வந்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மனிஷ் பாண்டே 51 ஓட்டங்களுடனும், டோனி ஒரு ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 9 ஆட்டங்களிலும் (3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி) தோல்வியே சந்திக்காமல் முழுமையாக வெற்றி வாகை சூடியது.

ஒரு தொடரில் மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே சந்திக்காமல் அதிக வெற்றிகளை குவித்த அணிகளின் வரிசையில் இந்தியா, ஆஸ்திரேலியாவை சமன் செய்து பிரம்மாதப்படுத்தியுள்ளது.

2010-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை 9-0 என்ற கணக்கில் வெற்றிக் கண்டது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios