Sydney International Tennis Benoit wins Muller semi-final semi-final
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்றில் லக்ஸம்பெர்க்கின் கில்லெஸ் முல்லரை வீழ்த்தி பிரான்ஸின் பெனாய்ட் பேர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த கில்லெஸ் முல்லரும், உலகின் 42-ஆம் நிலை வீரரான பெனாய்ட் பேரும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முல்லரை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பெனாய்ட்.
இதனையடுத்து அவர் தனது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொள்கிறார்.
அலெக்ஸ் டி மினார் தனது காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றிருந்தார்.
மற்றொரு காலிறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 6-7(4/7), 7-6(7/4), 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோவை வீழ்த்தினார்.
இதையடுத்து 2-வது அரையிறுதியில் டேனில் மெத்வதேவும், ஃபாபியோ ஃபாக்னினியும் மோதவுள்ளனர்.
அதேபோல், ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பாவ்லோ லோரென்ஸியை வீழ்த்தினார்.
