Swiss Indoor Tennis Roger Federer hits the eighth consecutive champion
ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஸ்விஸ் இண்டோர் டென்னிஸ் போட்டி ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் இறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ மோதினார்.
இதில், ரோஜர் ஃபெடரர் 6-7 (5), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் ரோஜர் ஃபெடரர் பேசியது:
"டெல் போட்ரோவுக்கு வாழ்த்துகள். நீங்கள் மிகச்சிறப்பாக ஆடி வருகிறீர்கள். உங்களைப் போன்று ஒவ்வொரு வாரமும் என்னாலும் சிறப்பாக ஆட முடிந்தது. ஆனால் வரக்கூடிய நாள்களில் அதுபோன்று ஆடுவது எனக்கு கடினமானது.
எனது உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஸ்விஸ் இண்டர் போட்டியில் பட்டம் வெல்வதற்காக அதிகளவில் உழைத்துவிட்டேன். கடந்த ஆறு நாள்களில் ஐந்து ஆட்டங்களில் விளையாடிவிட்டேன். அதனால் பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அதற்காக பாரீஸ் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் முழு உடற்தகுதியுடன் களமிறங்குவேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் ஃபெட்ரர்.
