Paris 2024: 50மீ ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரராக ஸ்வப்னில் குசலே சாதனை!
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 5ஆவது நாளான இன்று நடைபெற்ற 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் பிரிவில் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 7ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 5ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே போட்டியிட்டார்.
இவரை போன்று ஐஸ்வரி பிரதாப் சிங் தோமரும் போட்டியிட்டார். பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 12 சுற்றுகளில் 589 புள்ளிகள் பெற்று 11ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். ஆனால், ஆசிய சாம்பியனான ஸ்வப்னில் குசலே சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் 8 இடங்களுக்குள் வந்தார். அவர், 590 புள்ளிகள் பெற்று 7ஆவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா 2 வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் 35ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மகளிருக்கான தனிநபர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதே போன்று கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங் மற்றும் மனு பாக்கர் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
- Aishwary Pratap Singh Tomar
- Ankita Bhakat
- Archer Bhajan Kaur
- Archery
- Badminton
- India 2nd Bronze Medal
- India at 2024 Summer Olympics
- Manu Bhaker
- Olympics 2024
- Olympics 2024 Medal Tally
- Olympics Date and Time
- PV Sindhu
- Paris 2024
- Paris Olympics
- Paris Olympics 2024
- Paris Olympics 2024 India Schedule
- Paris Olympics 2024 India Schedule 5th Day July 31
- Paris Olympics 2024 Medal Table
- Sarabjot Singh
- Shooting
- Swapnil Kusale