Suspension of the next Indian woman Doping test fails ...

இந்திய பளு தூக்குதல் வீராங்கனை சுஷிலா பன்வார் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போதுதான் இந்திய கால்பந்து வீரர் சுப்ரதா பால் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ள நிலையில், அடுத்தது இந்திய வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்து புகாரில் சிக்கியிருப்பது விளையாட்டுத் துறையினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுஷிலா பன்வார், குவாஹாட்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், 75+ கிலோ எடைப் பிரிவில் 198 கிலோவைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்து, இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் செயலர் சாதேவ் யாதவ் கூறியதாவது:

“பாட்டியாலாவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளிடம் கடந்த மார்ச் 25-ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) சோதனை மேற்கொண்டது.

அப்போது, 42 பளுதூக்குதல் வீரர், வீராங்கனைகளின் மாதிரிகளில் நடத்திய சோதனையில், சுஷிலா பன்வாரின் 'ஏ' மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக நாடா அளித்த தகவலின் பேரில், சுஷிலா பன்வார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று சாதேவ் யாதவ் கூறினார்.