நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அந்த அணிக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது.
>
> இதில் தர்மசாலா (அக்.16), டெல்லி (அக்.20), மொகாலி (அக்.23) ஆகிய இடங்களில் நடக்கும் முதல் மூன்று ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
>
> எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் புதிய தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்தனர். இதன்படி ஜிம்பாப்வே தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்பி இருக்கிறார்.
>
> சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
>
> அரியானாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் புதுமுகமாக சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
>
> 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:
>
> டோனி (கேப்டன்), ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி, மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், மன்தீப் சிங், கேதர் ஜாதவ்.
>
> பின்னர் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும் போது, “உள்நாட்டில் இந்திய அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதை கருத்தில் கொண்டு அஸ்வின், ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. கம்பீரின் பெயரும் விவாதிக்கப்பட்டது. ஆனால் வளரும் தொடக்க ஆட்டக்காரராக மன்தீப்சிங்குக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது அவசியமாகும். அவர் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக உண்மையிலேயே நன்றாக ஆடினார்” என்று தெரிவித்தார்.
அணிக்குத் திரும்பினார் சுரேஷ் ரெய்னா; அஷ்வின், ஷமி, ஜடேஜா ஓய்வு…
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.
Latest Videos
