Super Series Badminton Progress for Indias Kashyap Main Round ...
சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் பிரதான சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க சுற்றில் இந்தியாவின் காஷ்யப் மற்றும் சீன தைபேவின் கான் சாவ் யுவ் மோதினர். இதில், 21-12, 21-10 என்ற செட் கணக்கில் சாவ் யுவை வீழ்த்தினார் காஷ்யப்.
அதனைத் தொடர்ந்து, காங் காங் வீரர் லீ செக் யூவை எதிர்கொண்ட காஷ்யப், அவரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரதானச் சுற்றுக்கு முன்னேறினார்.
பிரதானச் சுற்றில் தென் கொரிய வீரர் லீ டாங் குன்னை அவர் எதிர்கொள்கிறார் காஷ்யப்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் - ராமச்சந்திரன் ஸ்லோக் இணை 19-21, 17-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் கிம் வோன் ஹோ - சீங் ஜா சீ இணையிடம் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை 18-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹஃபீஸ் ஃபைஸல் - குளோரியா எமானுவேல் வித்ஜஜா இணையிடம் தோற்று வெளியேறினர்.
