குத்துச்சண்டையின் போது மயங்கி விழுந்து பலியான 9 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி ...!!

தூத்துக்குடியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென  மயங்கி விழுந்து உயிரிழந்த  சம்பவம்  தமிழகத்தையே  அதிர்ச்சிகுள்ளாக்கியது.

தூத்துக்குடியில் உள்ள , ஒரு அரசு பள்ளியில் படித்து வந்தவர் மாரீஸ்வரி .9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் குத்துசண்டை  பயிற்சியும்  பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த   குத்துச்சண்டை   போட்டியில், மாணவி மாரீஸ்வரி   கலந்துகொண்டார்.குத்துசண்டைக்கு இடையே  ஒதுக்கப்பட்ட நேரத்தில் திடீரென  மாணவி மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

உடனடியாக , மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே  அந்த மாணவி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பின்னர்,  இந்த  சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு கோணங்களில்  விசாரணை நடைபெற்று  வருகிறது.அதன்படி  மாணவி  உண்மையில் நல்ல  பயிற்சி பெற்றவரா ?மதிய வேளையில் அதிகம்   வெப்பம்  நிலவும் சமயத்தில், திறந்த வெளி மைதானத்தில், சிறுமிகளுக்கு எப்படி போட்டி  நடத்தலாம் ?  போட்டிக்கு முன் இந்த மாணவிக்கு முறையான  மருத்துவ பரிசோதனை  செய்யபட்டதா  என  பல  கோணங்களில்  விசாரணை நடைபெற்று வருகிறது,.மாணவி , திடீரென  மயங்கி  இழுந்து  உயிரிழந்த  சம்பவம்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.