Steve Smith is the world best player - Shane Warne Open Dog ...
டெஸ்ட் கிரிக்கெட்டை கணக்கில் கொண்டால் கோலியை விட ஸ்டீவ் ஸ்மித் தான் உலகின் மிகச் சிறந்த வீரர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறினார்.
சிறந்த வீரர்கள் 11 பேரை பட்டியலிட்டுள்ளார் ஷேன் வார்னே. அதன் முதலிடத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ், 2-வது இடத்தில் சகநாட்டவரான பிரயன் லாரா, 3-வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளனர். இந்த பட்டியலில் கோலி மற்றும் ஸ்மித்துக்கு 10-வது இடம் அளித்துள்ளார்.
இதுகுறித்து நியூஸ் கார்ப் ஊடகத்தில் நேற்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே பேட்டி ஒன்று அளித்திருந்தார்.
அதில், "விராட் கோலி மூன்று ஃபார்மட்டிலுமாக மிகச் சிறந்த வீரர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டை கணக்கில் கொண்டால் ஸ்டீவ் ஸ்மித் தான் உலகின் மிகச் சிறந்த வீரர்.
புள்ளி விவரங்களைக் கொண்டு ஒரு வீரரை நான் மதிப்பிடவில்லை. மாறாக, அவர் விளையாட்டை கையாளும் விதம், போட்டி முடிவில் அவரது தாக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடுகிறேன்.
என்னைப் பொருத்த வரையில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பவர், மூன்று முக்கியமான நாடுகளின் களத்தில் சதமடித்திருக்க வேண்டும். ஒன்று, மித வேக மற்றும் ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து. இரண்டு, வேகப்பந்து மற்றும் பவுன்சருக்கு சாதகமான ஆஸ்திரேலியா. மூன்றாவது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியா. இவற்றில் சதமடிப்பவரே சிறந்த பேட்ஸ்மேன்" என்று அவர் தெரிவித்தார்.
