Steve Smith is back in T-20 after the ban

பந்தை சேதப்படுத்திய புகாரில் தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கனடா நாட்டின் டி-20 போட்டிகளில் களமிறங்குகிறார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, பந்தை சேதப்படுத்தியதாக ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோர் மீது பகிரங்க புகார் எழுந்தது. 

இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை நடத்தி மூவருக்கும் ஓராண்டு தடை விதித்தது. 

இந்த நிலையில் மூவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து இதுபோன்று மீண்டும் நடக்காது என்றும் கூறினர். இதனையடுத்து உள்ளூர் கிளப் போட்டிகளில் விளையாட சிஏ அமைப்பு அனுமதி தந்துள்ளது. 

இந்த நிலையில் கனடாவில் புதிதாக தொடங்கவுள்ள டி-20 லீக் போட்டியில் ஸ்மித் விளையாடுகிறார். கிறிஸ் கெயில், ரஸ்ஸல், ஷாகித் அப்ரிடி, ஆகியோரும் அவருடன் விளையாடுகின்றனர். 

வரும் ஜூன் 28-ஆம் தேதி முதல் ஆறு அணிகள் பங்கேற்கும் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 16-ல் நடக்கிறது.