State Sub-junior junior swimming competitions starting June 1 ...

ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள மாநில சப்-ஜூனியர், ஜூனியர் நீச்சல் போட்டிகளில் 650 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-ஆவது ஜூனியர் மாநில சப்-ஜூனியர், ஜூனியர் நீச்சல் போட்டிகள் சென்னை, வேளச்சேரியில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளன. 

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் இந்தப் போட்டிகள் வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், 650 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் நீச்சல் போட்டிகளும், டைவிங் போட்டிகளும் இடம்பெறுகின்றன. இந்தப் போட்டிகளை தமிழக வடக்கு மண்டல ஐ.ஜி. சி.ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.நிறைவு நாளான ஜூன் 3-ஆம் தேதி பத்மஸ்ரீ ஷைனி வில்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர்கள், வீராங்கனைகள், வரும் ஜூன் 24-ல் புணேயில் தொடங்கவுள்ள சப்-ஜூனியர், ஜூனியர் தேசியப் போட்டிகளில் கலந்து கொள்வர்.