State level volleyball competition Kanchipuram Valliyamy Polytechnic College...
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பிடித்தது.
மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 அணிகள் கலந்துகொண்டன. கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் ஆர்.எம்.தேவராஜா போட்டிகளை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வி.வேதகிரிஈஸ்வரன், துணை முதல்வர் டி.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டி முடிவில், காஞ்சிபுரம் வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பிடித்தது.
திருவாரூர், ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாமிடமும், திருச்சியைச் சேர்ந்த எம்.ஏ.எம்.பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாமிடம் பிடித்தன. திருநெல்வேலி, இந்தியன் பாலிடெக்னிக் கல்லூரி நான்காமிடம் பெற்றது.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை கொங்கு கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கே.எம். பிரகாஷ்ராஜ், உதவி உடற்கல்வியாளர் கே. ஸ்ரீநாத் ஆகியோர் செய்தனர்.
