State-level hockey Chennai city police team wins ...
மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை மாநகரக் காவல் துறை அணி வெற்றி பெற்று அசத்தியது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஹாக்கி கிளப் சார்பில் 5-வது ஆண்டாக மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைப்பெற்றன.
மே 9-ஆம் தொடங்கிய இந்தப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இறுதி நாளான நேற்று இறுதி ஆட்டம் நடைப்பெற்றது.
இதில், சென்னை மாநகரக் காவல் துறை அணியும், மதுரை திருநகர் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகரக் காவல் துறை அணி வென்றது.
அதன்படி, இரண்டாவது இடத்தை மதுரை திருநகர் அணியும், மூன்றாவது இடத்தை மதுரை ரிசர்வ் லைன் அணியும் பிடித்தன.
