State level chess tournament started with the spirit of Thanjavur ...

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான 28-வது மாநில அளவிலான செஸ் போட்டி, தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆராவாரத்துடன் தொடங்கியது.

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான 28-வது மாநில அளவிலான செஸ் போட்டி ஏன்சியன்ட் செஸ் அகாதெமி, தஞ்சாவூர் மாவட்ட செஸ் சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டி மே 12-ஆம் தேதி நிறைவடையும்.

இதில், சென்னை, காஞ்சிபுரம், கோவை, சேலம், கன்னியாகுமரி உள்பட 29 மாவட்டங்களைச் சேர்ந்த 230 சிறுவர்கள், 90 சிறுமிகள் என மொத்தம் 320 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் போட்டியின் தொடக்க விழாவுக்கு தஞ்சாவூர் மாவட்ட செஸ் சங்க தலைவர் ஜெரார்டு பிங்க்னோரா ராஜ் தலைமை வகித்தார்.

இப்போட்டியை ரோட்டரி மாவட்ட நிர்வாகச் செயலர் என். வெங்கடாஜலபதி தொடங்கி வைத்தார்.

கமலா சுப்பிரமணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி வி.சுப்பிரமணியன், ரோட்டரி உதவி ஆளுநர் ஜி.செங்குட்டுவன், மாவட்ட செஸ் சங்க செயலர் ஆர்.பி.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடைபெற இருக்கும் இப்போட்டியில் சிறப்பாக செயல்படும் இரு சிறுவர்கள் மற்றும் இரு சிறுமிகள், சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.