State Junior Hockey Tournament Update kalirutiku qualified teams

மாநில ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்று வீர நடைபோடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான 5-வது மாநில அளவிலான ஆடவர் ஜூனியர் ஹாக்கிப் போட்டி நடைப்பெற்றது.

செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அணி 5-0 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியைத் துவம்சம் செய்தது.

இரண்டாவது ஆட்டத்தில் திருச்சி மாவட்ட அணி 6-0 என்ற கோல் கணக்கில் சிவகங்கை மாவட்ட அணியை வீழ்த்தி கர்சித்தது.

மூன்றாவது ஆட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட அணி 19-0 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் மாவட்ட அணியை தோற்கடித்தது.

நான்காவது ஆட்டத்தில் வேலூர் மாவட்ட அணி 15-1 என்ற கோல் கணக்கில் தேனி மாவட்ட அணியை தோற்கடித்தது.