State Hockey League Four Districts of Super League Tour ...
மாநில வலைகோல் பந்தாட்டப் போட்டியில், திருநெல்வேலி, அரியலூர், இராமநாதபுரம், மதுரை மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
திருநெல்வேலியில் மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஈரோடு அணியும், கிருஷ்ணகிரி அணியும் மோதின.
இந்தப் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் தொடங்கி வைத்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணகிரி அணி வென்றது.
இரண்டாவது ஆட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அணியுடன் மோதிய இராமநாதபுரம் மாவட்ட அணி 2-12 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதனையடுத்து, திருநெல்வேலி, அரியலூர், இராமநாதபுரம், மதுரை மாவட்ட அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதிப் பெற்றன.
இந்தப் போட்டியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.சேவியர் ஜோதி சற்குணம், மதுரை மண்டல முதுநிலை மேலாளர் டேனியல் உள்பட பலர் பங்கேற்றனர்.
