St. Joseph Engineering College won the weight lifting championship ...
அண்ணா பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் பிரிவு பளு தூக்கும் போட்டியில் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அண்ணா பல்கலைக்கழக அனைத்து மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் பிரிவு பளு தூக்கும் போட்டியில் புதுக்கோட்டையில் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை மௌன்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள்கள் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 170 கல்லூரிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியின் தொடக்க விழாவிற்கு கல்லூரித் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை தாங்கினார்.
அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத் தலைவர் முனைவர் எஸ்.செல்லதுரை போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்தப் போட்டியில் சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி அதிக புள்ளிகள் எடுத்து வாகைச் சூடியது.
நாமக்கல் பாவை பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
நாகர்கோவில் லொயோலா பொறியியல் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பிடித்தன.
