Srikanth progress and finished 2nd round match in 21 minutes ...

ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் 21 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்து, இந்தியாவின் ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றிற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஜெர்மனியின் முல்ஹெய்ம் அன் டெர் ரூர் நகரில் நடைபெற்று வரும் ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் 21-4, 21-11 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் ஆலன் ரோஜை வீழ்த்தினார்.

இதில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த், 21 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அடுத்த சுற்றில் ஜப்பானின் யூசூகே ஓனோடெராவை சந்திக்கிறார்.

மற்ற ஒற்றையர் முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சுபங்கர் தேய் 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாவோ ஜுன்பெங்கையும், ஹர்ஷித் அகர்வால் 18-21, 21-8, 21-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜோர்ன் சேகனையும் தோற்கடித்தனர்.

அடுத்த சுற்றில் சுபங்கர் தேய், ஹாங்காங்கின் லாங் ஆங்கஸையும், ஹர்ஷித், ஹாங்காங்கின் ஹூ யூனையும் எதிர்கொள்கின்றனர்.

அதேநேரத்தில் இந்தியாவின் சிரில் வர்மா, ஹர்ஷீல் டேனி ஆகியோர் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் தன்வி லேடு தனது முதல் சுற்றில் 14-21, 12-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் பிரிஸ்கிலா சியஹயாவிடம் தோல்வி கண்டார்.