Srikanth became the third champion in the Super Series contest ...

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் மூன்றாவது முறையாக இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஜப்பானின் கஜுமாஸா சகாயுடன் மோதினார். இதில், 21-11, 21-19 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கஜுமாஸா சகாயை தோற்கடித்து வாகைச் சூடினார் ஸ்ரீகாந்த்.

வெற்றி குறித்து ஸ்ரீகாந்த் கூறியது:

“கஜுமாஸா சிறப்பாக ஆடினார். குறிப்பாக இரண்டாவது செட்டில் அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தது. அந்தச் செட்டில் ஒரு கட்டத்தில் 6-11 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நான், பின்னர் சரிவிலிருந்து மீண்டதோடு, 13-13 என்ற கணக்கில் சமநிலையை எட்டினேன். அதுவே எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.

என்னுடைய பயிற்சியாளர் முல்யோ ஹன்டாயோவின் பயிற்சியால் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறினேன். இப்போது இந்தோனேசிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறேன். அதனால் எனது பயிற்சியாளருக்கு எனது இதயத்தில் முக்கியம் இடம் உண்டு. ஒரு வாரமாக எனக்கு மிகப்பெரிய ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு ரூ.5 இலட்சம் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் தலைவர் இமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.