Sri Lankan squad to lead India against Malinga Will you win this game?
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெறுகிறது.
முதல் மூன்று ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-ஆவது ஆட்டத்தில் களமிறங்குகிறது.
அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் வென்றே ஆக வேண்டும் என்று முனைப்போடு களமிறங்குகிறது.
தொடக்க வீரர்கள் ஷிகர் தவன், ரோஹித் சர்மா, பின்வரிசையில் களமிறக்கப்பட்ட கே.எல்.ராகுல், மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, கேப்டன் கோலி, தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா - புவனேஸ்வர் குமார் கூட்டணியே இந்த ஆட்டத்திலும் நீடிக்கும்.
சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் உள்ளனர்.
இலங்கை அணி தொடர் தோல்வி, முன்னணி வீரர்களின் காயம் போன்றவற்றால் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்துள்ளது.
கடந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் சன்டிமல் வலது பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்ட கபுகேதராவும் காயம் காரணமாக விலகிவிட்டார். அதனால் மலிங்கா தலைமையில் களமிறங்குகிறது இலங்கை அணி.
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நிரோஷன் டிக்வெல்லா, குஷல் மென்டிஸ், லஹிரு திரிமானி ஆகியோர் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்கா, விஸ்வா பெர்னாண்டோ கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அகிலா தனஞ்ஜெயாவும் இலங்கை அணியில் உள்ளனர்.
