இலங்கை கேப்டன் உபுல் தரங்காவுக்கு இந்தியாவுக்கு எதிரான இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் பல்லகெலேவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.

இதில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தில் இலங்கை அணி மூன்று ஓவர்கள் குறைவாக வீசியிருந்தது. இதையடுத்து உபுல் தரங்காவுக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கடைசி மூன்று போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தினேஷ் சன்டிமல் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் குணதிலகாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அடுத்த இரு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அவருக்குப் பதிலாக லஹிரு திரிமானி சேர்க்கப்பட்டுள்ளார். 

அறிவிக்கப்பட்ட அணியின் விவரம்:

சமரா கபுகதேரா (கேப்டன்), தினேஷ் சன்டிமல், லஹிரு திரிமானி, ஏஞ்செலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தனுஷ்கா குணதிலகா, குஷல் மென்டிஸ், சமரா கபுகேதரா, மிலிந்தா சிறிவர்த்தனா, புஷ்பகுமாரா, அகிலா தனஞ்ஜெயா, லக்ஷன் சன்டாகன், திசாரா பெரேரா, டி சில்வா, லசித் மலிங்கா, துஷ்மந்தா சமீரா, விஸ்வா பெர்னாண்டோ, உபுல் தரங்கா (5-வது ஆட்டத்திற்கு மட்டும்).