ஐபிஎல் 11 ஆவது சீசனில் சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி 4 முறை மோதியதில் 4 முறையும் அந்த அணி தோல்வி அடைந்தது,

11-வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி வாட்சனின் அதிரடியால் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஐதராபாத் அணி சென்னை அணியிடம் பெற்ற நான்காவது தோல்வி இதுவாகும்.

முன்னதாக, கடந்த 22-ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதேபோல், கடந்த 13-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 19 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து வென்றது.

ஏப்ரல் 22-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், ஐதராபாத் அணியும் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் தோனி தலைமையிலான சென்னை அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன்  பட்டத்தை வென்றது. சன் ரைசர்ஸ் அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி 178 ரன்கள் எடுத்தனர்.

மிகக் கடினமான இலக்காக கருதப்பட்ட இதை வாட்சன் ரொம்ப ஈசியா எடுதது சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சென்னை  மூன்று  முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தற்போது உள்ள 8 அணிகளில் வயதானவர்கள் அணி என அனைவராலும் கிண்டல் செய்யப்பட்ட சிஎஸ்கே, தனது அனுபவம் மிகுந்த வீரர்களால் வெற்றியை எட்டியுள்ளது.