srh set tough target to csk in ipl final
ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டியில், கோப்பையை வெல்வதற்கு சென்னை அணிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஹைதராபாத் அணி.
ஐபிஎல் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஹைதராபாத் அணி தொடக்க வீரர் கோஸ்வாமியை இரண்டாவது ஓவரிலேயே இழந்தாலும் தவான் - வில்லியம்சன் ஜோடி சிறப்பாக ஆடியது. தவான், 26 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 47 ரன்களில் அவுட்டானார். ஷாகிப் அல் ஹாசன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடி, ஹைதராபாத் அணியின் ரன் ரேட்டை குறைந்துவிடாமல் பார்த்துக்கொண்ட யூசுப் பதான், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார். பிராத்வைட் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. சென்னை அணி கோப்பையை வெல்ல 179 ரன்கள் எடுக்க வேண்டும்.
சிறந்த பவுலிங் அணியான ஹைதராபாத்துக்கு எதிராக 179 ரன்கள் என்ற இலக்கை விரட்டுவது கடினம். இலக்கை விரட்டி சென்னை வெல்லுமா என்பதை பார்ப்போம்..
